இந்த வருடம் எனக்கு திருமணம் - நடிகர் கவுதம் கார்த்திக்

இந்த வருடத்தில் தான் திருமணம் செய்துகொள்வேன் என கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் எனக்கு திருமணம் - நடிகர் கவுதம் கார்த்திக்
Published on

மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'இவன் தந்திரன்', 'தேவராட்டம்' போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பத்து தல, 1947 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் கார்த்திக்கின் மகன். கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் 'தேவராட்டம்' படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் காதலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் தனது திருமணம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். கவுதம் கார்த்திக் கூறும்போது "எனக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும். நேரம் வரும்போது திருமணம் குறித்து பேசுவேன்" என்றார். மேலும் அவர் கூறும்போது, "சிறந்த நடிகனாக வேண்டும் என்ற ஆர்வத்தில் சினிமா துறைக்கு வந்தேன். ஆரம்பத்தில் நான் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தபோது கவலையாக இருந்தது. கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட எந்த வேடங்கள் கொடுத்தாலும் ரசிகர்களை கவர்வதாக இருந்தால் நடிக்க ஒப்புக்கொள்வேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com