கிரிக்கெட்டை மையமாக கொண்ட படத்தில் நடிக்கும் யோகி பாபு


கிரிக்கெட்டை மையமாக கொண்ட படத்தில் நடிக்கும் யோகி பாபு
x
தினத்தந்தி 4 May 2025 9:57 PM IST (Updated: 8 May 2025 7:42 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் யோகி பாபு கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை,

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. இவர் தற்போது ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், யோகி பாபுவின் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது நடிகர் யோகி பாபு கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை 'பொம்மை நாயகி' பட இயக்குனர் ஷான் இயக்குகிறார். படத்திற்கான திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யோகி பாபு - ஷான் கூட்டணியில் வெளியான 'பொம்மை நாயகி' படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story