

சென்னை,
"மனதுக்கு சரி என பட்டதை உடனடியாக செய்துவிட வேண்டும். குறிப்பாக ஒருவருக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்தால் யோசிக்காமல் செய்துவிட வேண்டும். என நோரா பாதேஹி பேசியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் தனது நடனத் திறமையாலும், வசீகரமான நடிப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை நோரா பதேஹி. கனடாவில் பிறந்து வளர்ந்த இவர், இந்திய சினிமாவில் தனது திறமையை நிரூபித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 'தில்பர்', 'ஓ சாகி சாகி'' உள்ளிட்ட பாடல்களில் தனது நடனத்தால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நோரா பதேஹி, தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்-2' படத்தில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இதுதவிர ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் 'காஞ்சனா-4' படத்திலும் பேயாக மிரட்டவுள்ளார். பாலிவுட் சினிமாவை போல் கோலிவுட் சினிமாவிலும் தனது முத்திரையை பதிக்க உள்ளார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நோரா படேஹியிடம், 'வாழ்க்கையில் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "மனதுக்கு சரி என பட்டதை உடனடியாக செய்துவிட வேண்டும். குறிப்பாக ஒருவருக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்தால் யோசிக்காமல் செய்துவிட வேண்டும். அதேபோல மற்றவர்களுக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ... என்று எண்ணி நமது சந்தோஷத்தை தியாகம் செய்யவே கூடாது. இந்த வாழ்க்கை அற்புதமானது. அதில் வரும் ஒவ்வொரு நல்ல விஷயமும் கொண்டாடி தீர்க்க வேண்டும். அந்த கொண்டாட்டங்களுக்கு தடை போடுவது சரியாகாது. எனவே வாழ்க்கையை ஒவ்வொரு தருணமாக அனுபவித்து வாழவேண்டும்”, என்று பதிலளித்தார்.