

சென்னை,
சென்னையில் நடந்த 'பியார் பிரேமா கல்யாணம்' படவிழாவில் ராதிகா சரத்குமார் பேசுகையில், "இப்போதுள்ள சமுதாயத்தில் குறிப்பாக இளைஞர்களின் கண்ணோட்டத்தில் காதல், திருமணம், வாழ்க்கை மீதான புரிதலே வேறுமாதிரியாக இருக்கிறது. என்று பேசியுள்ளார்.
'பியார் பிரேமா காதல்', 'ஸ்டார்' படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இளன், தற்போது 'பியார் பிரேமா கல்யாணம்' என்ற புதிய படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக சான்வி மேக்னா நடிக்கிறார். ராதிகா சரத்குமார், செந்தில், யோகிபாபு, இளங்கோ குமரவேல் உள்ளிட்டோரும் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் ரிலீசாகிறது.
சென்னையில் நடந்த படவிழாவில் ராதிகா சரத்குமார் பேசுகையில், "இப்போதுள்ள சமுதாயத்தில் குறிப்பாக இளைஞர்களின் கண்ணோட்டத்தில் காதல், திருமணம், வாழ்க்கை மீதான புரிதலே வேறுமாதிரியாக இருக்கிறது. இப்போதுள்ள தலைமுறையினர் சுதந்திரமாக இருக்கிறார்கள். முடிவுகளை தாங்களாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் 'போகப்போக தெரியும்...' (பாடுகிறார்) என்ற பழைய பாடல் வரிகளையே அறிவுரைகளாக வழங்குகிறேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, "திருமண வாழ்க்கையில் காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க சிறந்த வழி என்ன? என்ற கேள்விக்கு, 'திருமணமே பண்ணாதீங்க...' என்று ராதிகா பதிலளித்தார். முன்னதாக கதாநாயகி சான்வி மேக்னா ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, நடிகர் செந்தில் குறுக்கிட்டு, “இது தமிழ்ப் படம்மா... தமிழில் பேசுங்க...' என்று கூற, சிரிப்பலை எழுந்தது.