எனது முந்தைய படங்களை விட.. இது தரமான படைப்பாக இருக்கும்- சிவகார்த்திகேயன்

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் "சேயோன்" படத்தின் படப்பிடிப்பு பணிகள் மதுரையில் தொடங்கியுள்ளது.
எனது முந்தைய படங்களை விட.. இது தரமான படைப்பாக இருக்கும்- சிவகார்த்திகேயன்
Published on

மதுரை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது தனது 26வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடிக்க உள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் டர்மரிக் மீடியா நிறவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். மேலும் நடிகர்கள் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தநிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கியுள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிக்காக மதுரை வந்த நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசிய போது, "மதுரைக்கு எப்போதும் ஒரு தனி பவர் இருக்கு.. மிக சிறப்பாக இருக்கும்.. அந்த பவர் துளிக்கூட குறையாமல் "சேயோன்" திரைப்படத்திற்கும் இருக்கு. எனது முந்தைய படங்களை விட, அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் ஒரு தரமான மாஸ் படைப்பாக இது அமையும்.. என்றார்.

மேலும், முதல் அமைச்சர் குறித்த கேள்விக்கு, விஜய் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நாளே தொலைபேசி மூலம் வாழ்த்தியதாக கூறினார்.. இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்த பிறகும், அதே அன்போடு நலம் விசாரித்ததாக நெகிழ்ந்தார்.மேலும், திரையுலகை போலவே மக்கள் பணியிலும் விஜய் மிக சிறந்த ஆட்சியைத் தருவார் என்று உறுதி.. என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com