திண்டுக்கல் மாணவி நடித்த குறும்படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்

காற்று மாசு காரணமாக பெருந்தொற்று ஏற்படுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மையமாக கொண்டு குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாணவி நடித்த குறும்படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்
Published on: 

திண்டுக்கல்,

காற்று மாசை மையமாக கொண்டு திண்டுக்கல் மாணவி நடித்த குறும்படம் சர்வதேச விருதுகள் வென்றுள்ளது.

3 விருதுகள்

கொல்கத்தாவில் தாகூர் சர்வதேச சினிமா விருது வழங்கும் விழா நடந்தது. இதற்கான போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் இடம்பெற்று இருந்தன.

இதில் காற்று மாசு காரணமாக பெருந்தொற்று ஏற்படுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட 'அவேக் பிபோர் அனதர் பென்டமிக்' எனும் குறும்படத்துக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல் கலிங்கா சினிமா விழாவிலும் ஒரு விருதை வென்றது.

இதன்மூலம் 3 சர்வதேச விருதுகளை வென்றதோடு, மேலும் 3 விருதுகளுக்கான போட்டியிலும் அந்த குறும்படம் இடம்பெற்று இருக்கிறது. இதற்கிடையே திண்டுக்கல் புத்தக திருவிழாவில் நடந்த குறும்பட போட்டியிலும் முதல் பரிசை பெற்றது.

திண்டுக்கல் சிறுமி

இந்த குறும்படத்தில் திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஊராட்சி மேட்டூரை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஜெய் சங்கர் - உமாதேவி தம்பதியின் மகள் முகிழன்பு (7 வயது) அசத்தலாக நடித்துள்ளாள். இவள் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த குறும்படத்தை மாலப்பட்டி பகுதியை சேர்ந்த மணிஅற்புதராஜ் இயக்கியுள்ளார்.

X