ராம் சரணின் 'பெத்தி' படம் எப்படி இருக்கு? - விமர்சனம்

ஜான்வி கபூர் அழகாலும், கவர்ச்சி காட்டியும் ரசிகர்களை ஈர்க்கிறார்.
பெத்தி/peddi
Published on

மலையோர கிராமவாசியான ராம்சரண், ஊரில் உள்ள சர்க்கரை ஆலையில் கூலியாக வேலை பார்க்கிறார். அவரது ஊரை சேர்ந்த மக்களுக்கு அங்கு சம்பளம் குறைவாகவே வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஆலை உரிமையாளரிடம் முறையிட்டாலும், 'அடையாளமே இல்லாத ஊரில் பிறந்த உங்களுக்கு முழு சம்பளம் ஒரு கேடா...' என்ற பதிலே கிடைப்பதால் மக்கள் பரிதவித்து போகிறார்கள்.

இதையடுத்து கிரிக்கெட்டில் கலக்கி வரும் ராம்சரண், அங்கு நடக்கும் ஒரு அவமானகர சம்பவதால் கிரிக்கெட் விளையாட்டையும் கைவிடுகிறார்.

இந்த சூழலில் தனது ஊருக்காவும், ஊர் மக்களுக்காகவும் போராட துணியும் ராம்சரண், சொந்த ஊருக்கு அடையாளம் தேடித்தர விரும்புகிறார். இதற்காக குஸ்தி கற்றுக்கொள்கிறார்.

குஸ்தி விளையாட்டு போட்டி அரங்கேறும் சூழலில் ஏராளமான தடைகள் அவரை வந்து சேருகிறது. அந்த தடைகளை ராம்சரண் களைந்து வெற்றி பெற்றாரா? தனது ஊருக்கு விரும்பிய அடையாளத்தை அவர் பெற்றுக் கொடுத்தாரா? என்பதே மீதி கதை.

கிரிக்கெட் வீரர், குஸ்தி வீரர் என்ற இருவேறு களத்தில் அசத்தியுள்ளார் ராம்சரண். கட்டுமஸ்தான அவரது உடல் கதாபாத்திரத்துடன் ஒன்றுகிறது. நடனம், சென்டிமெண்ட் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார்.

ஜான்வி கபூர் அழகாலும், கவர்ச்சி காட்டியும் ரசிகர்களை ஈர்க்கிறார். இன்னும் அவரை பயன்படுத்தி இருக்கலாம். குஸ்தி வாத்தியாராக முத்திரை பதித்துள்ளார், சிவராஜ்குமார். அவரது அனுபவ நடிப்பு கைகொடுத்துள்ளது,. ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி என அனைவருமே அட்டகாசப்படுத்தி இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் பரவசம். பின்னணி இசையும் பிரமாதம். ரத்னவேலு ஒளிப்பதிவு பலம் சேர்த்துள்ளது. பரபரப்பான திரைக்கதை பலம் சேர்க்கிறது. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

நவீன இந்தியாவில் இன்றளவும் அடையாளம் பெறாத கிராமங்களின் அவல நிலையை, விளையாட்டுகளின் பின்னணியில் கமர்ஷியலாக சொல்லி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் புச்சி பாபு சனா. கிராமத்து மக்களுடனான சென்டிமெண்ட் காட்சிகள் நெகிழ்ச்சி தருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com