"செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்" - சினிமா விமர்சனம்

யூகிக்க முடியாதபடி வலுவான திரைக்கதையில் பரபரப்பான காட்சிகளின் கோர்வையாய் படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டி.
"செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்" - சினிமா விமர்சனம்
Published on

இந்திய அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய 'சீதாராம் பெனாய் கேஸ் நம்பர் 18', 'சீதாராம் கேஸ் ஆப் கொண்டானா' வரிசையில் வெளியாகி இருக்கும் கிரைம் - திரில்லர் படம்.

நேர்மையான போலீஸ் அதிகாரியான விஜய ராகவேந்திராவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி ஒன்றில் இரட்டை கொலைகள் நடக்கிறது. இந்த கொடூர கொலைகள் நகர மக்களை உறைய செய்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த கொலைகளை செய்வது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என தெரியவருகிறது. இதையடுத்து விசாரணையும் தீவிரமடைகிறது.

Also Read
'மை டியர் டாலி' - சினிமா விமர்சனம்
"செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்" - சினிமா விமர்சனம்

இதற்கிடையில் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவை போலீசார் சந்தேகிக்கிறார்கள். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வர போலீசார் உறைந்து போகிறார்கள். அது என்ன? கொலைகளை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.

பொறுப்பான போலீஸ் அதிகாரியான விஜய ராகவேந்திரா, கதாபாத்திரத்துடன் ஒன்றி எதார்த்த நடிப்பை வாரி கொட்டியுள்ளார். விசாரணை காட்சிகளில் அவர் காட்டும் வேகமும், கொலையாளியை நெருங்கும் இடத்தில் அவரது துடிப்பான நடிப்பும் பாராட்டும்படி அமைகிறது.

Also Read
ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2' படத்தின் டீசர் வெளியானது
"செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்" - சினிமா விமர்சனம்

சந்தேக பார்வை வீசும்படியான கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அவரது பின்னணி எதிர்பாராதது. உஷா பந்தாரி உள்பட நடிகர் - நடிகைகள் அனைவருமே எதார்த்தமான நடிப்பை காட்டி கவனம் ஈர்க்கிறார்கள். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

ஹேமந்த் ஒளிப்பதிவில் காட்சிகளில் பரபரப்பு. நவநீத் ஷாமின் இசை படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கிறது. கிரைம் - திரில்லர் பாணியில் சொல்லப்பட்ட புதுமையான கதையும், காட்சி பின்னணியும் படத்துக்கு பலம். சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

Also Read
ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
"செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்" - சினிமா விமர்சனம்

யாருமே யூகிக்க முடியாதபடி வலுவான திரைக்கதையில் பரபரப்பான காட்சிகளின் கோர்வையாய் படத்தை நகர்த்தி, பரபரப்புக்கு குறைவின்றி கவனிக்க செய்துள்ளார் இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டி. உளவியல் ரீதியான மோதல் காட்சிகள், மனநிலை பாதிக்கப்பட்ட மனிதரின் உள்ளார்ந்த குழப்பத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் புதுமை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com