

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அன்பில் அவன்’. கதிர் பாலு, மகா தில்லி கணேஷ், சாபமோன் அப்து சமத், ரேவதி என பலர் நடித்துள்ளனர்.
‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை அசோக் செல்வன் தயாரித்துள்ளார். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அதிரடி காட்சிகளுக்கு பிரபல சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார். போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார்.
அசோக் செல்வன் நடித்த ‘அன்பில் அவன்’ படம் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.