

கார்த்திக் சுப்பராஜின்‘டோரதி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது
இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.
‘டோரதி’ திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே பிரபலமடைந்தன.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1990-களில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்ட இந்தப் படம், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில், டோரதி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 23 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் இதனை நெட்பிளிக்ஸில் பார்த்து ரசிக்கலாம்.