'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அவந்திகா மிஸ்ரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com