ஓ.டி.டி.யில் வெளியானது 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படம் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஓ.டி.டி.யில் வெளியானது 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'
Published on

அசோக் செல்வன் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அவந்திகா மிஸ்ரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான காமெடியாக இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் ஓ.டி.டி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இப்படம் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com