

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
1. பேட்ரியாட்
மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த படம் ‘பேட்ரியாட்’ . மகேஷ் நாராயணன் இயக்கிய இப்படத்தில் பகத் பாசில், நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜீ5 ஓடிடியில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது.
2. 29 படம்
கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜி-ஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘29’ திரைப்படத்தை ரத்ன குமார் இயக்கியிருந்தார். படத்தில் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விது நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ‘மேன்சன் குத்து’ பாடல் வைரலானது. இப்படம் ரூ2 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘29’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.
3. கே டி: தி டெவில்
கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா பதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.
4. தி ரைஸ் ஆப் அசோகா
சதீஷ் நினாசம் நாயகனாக நடித்துள்ள ‘தி ரைஸ் ஆப் அசோகா’ படத்தில் நாயகியாக சப்தமி கவுடா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் பி சுரேஷ், சம்பத் மைத்ரேயா, ரவிசங்கர், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, யாஷ் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விருத்தி கிரியேஷன் மற்றும் சதீஷ் பிக்சர்ஸ் ஹவுஸ் சார்பில் வர்தன் நரஹரி, ஜெய்ஷ்ணவி மற்றும் சதீஷ் நினாசம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கதையை தயானந்த் டி.கே எழுதியுள்ளார்.
இந்த படம் முன்பு ‘அசோகா பிளேட்’ என்று அழைக்கப்பட்டது , ஆனால் இயக்குனர் வினோத் தொண்டேலின் மறைவுக்குப் பிறகு படம் நிறுத்தப்பட்டது. பின்னர் நடிகர் சதீஷ் நினாசம் அதை ‘தி ரைஸ் ஆப் அசோகா’ என்ற புதிய தலைப்பில் மீண்டும் உயிர்ப்பித்தார். 1970-களில் நடக்கும் ஒரு சமூக-அரசியல் போராட்டம் மற்றும் புரட்சியை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘தி ரைஸ் ஆப் அசோகா’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஜூன் 5 ம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.