"காதலிக்க நேரமில்லை" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு


காதலிக்க நேரமில்லை படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2025 5:59 PM IST (Updated: 7 Feb 2025 1:41 PM IST)
t-max-icont-min-icon

ரவி மோகன் நடித்துள்ள "காதலிக்க நேரமில்லை" திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

'பிரதர்' படத்தை தொடர்ந்து ரவிமோகன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் 'பிரேக் அப் டா' பாடல் வைரலானது.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில், 'காதலிக்க நேரமில்லை' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. தன்பாலின ஈர்ப்பு, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முறை என நவீன காதல் கதையாக உருவான இது ரூ. 10 கோடி வரை வசூலித்தது.

இந்நிலையில், "காதலிக்க நேரமில்லை" படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story