'கருப்பு' - ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்... இவ்வளவு கோடிக்கா?

நடிகர் சூர்யாவின் 45-வது படம் 'கருப்பு'.
'கருப்பு' - ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்... இவ்வளவு கோடிக்கா?
Published on

சென்னை,

நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.35 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. படம் ரிலீஸ் ஆன பிறகு மேலும் பல கோடிகளை சேர்த்து தருவதாக தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் சூர்யாவின் 45-வது படம் 'கருப்பு'. இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படம் மே மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read
’ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ பட டிரெய்லர் வெளியீடு... திரைக்கு வருவது எப்போது?
'கருப்பு' - ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்... இவ்வளவு கோடிக்கா?

இதற்கிடையில், 'கருப்பு' படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியானநிலையில், விரைவில் இரண்டாவது பாடல் வெளியாக இருக்கிறது. இதனை நடிகர் சிம்பு பாடியிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com