ஓடிடியில் வெளியாகும் ‘மீசைய முறுக்கு 2’.. எதில், எப்போது வெளியாகும்?

தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
ஓடிடியில் வெளியாகும் ‘மீசைய முறுக்கு 2’.. எதில், எப்போது வெளியாகும்?
Published on: 

சென்னை,

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம்

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ‘ஆம்பள’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இதன்பின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதற்கிடையில், ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து இயக்கிய ‘மீசைய முறுக்கு 2’ படம் சமீபத்தில் வெளியானது . இந்த படத்தில் கெட்டிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஜே. ஆச்சார், நாசர், ஹர்ஷத் கான், பாபா பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கானா பாடல்களையும், கானா கலைஞர்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்து ‘மீசைய முறுக்கு 2’ படம் உருவாகியுள்ளது.

ஓடிடி ரிலீஸ்

தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ மீண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், ஓடிடி நிறுவனம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com