ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா-கவின் நடித்த 'ஹாய்' படம்.. எதில் பார்க்கலாம்?

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா-கவின் நடித்த 'ஹாய்' படம்.. எதில் பார்க்கலாம்?
Published on

காதலும், அதனால் ஏற்படும் குழப்பங்களும் மையாக கொண்ட 'ஹாய்' படம் நாளை (செப்டம்பர் 25-ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா - கவின் கூட்டணி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து நடித்த திரைப்படம் ‘ஹாய்’. கடந்த மாதம் வெளியான இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியிருந்தார். ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் விக்னேஷ் சிவனின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ இணைந்து தயாரித்துள்ளது.

முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள்

நயன்தாரா, கவினுடன் பிரபு, கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார், வி.டி.வி.கணேஷ், சத்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காதல் கதையை மையமாகக் கொண்ட படம்

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் மயில் என்ற இளைஞனைச் சுற்றி கதை நகர்கிறது. சிறுவயது காதல் நிராகரிக்கப்பட்ட நிலையில் சென்னைக்கு வரும் அவர், குடும்ப பிரச்சினைகளால் தவிக்கும் தேவயானியை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே உருவாகும் காதலும், அதனால் ஏற்படும் குழப்பங்களும் படத்தின் மையமாக அமைந்துள்ளன

ஓடிடி ரிலீஸ்

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, இந்த படம் நாளை (செப்டம்பர் 25-ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com