நிவின் பாலியின் பிரதிச்சாயா படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?

இந்த படத்தை பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
நிவின் பாலியின் பிரதிச்சாயா படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?
Published on

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. பிரேமம் படம் மூலம் அறிமுகமான இவர் மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பிரதிச்சாயா. இந்த படத்தை பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஷர்புதீன், பாலச்சந்திர மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜஸ்டின் வர்கீஸ் இசையமைத்துள்ளார்.

அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி,வருகிற 24 ஜியோ பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், நடிகர் நிவின் பாலி நயன்தாராவுடன்'டியர் ஸ்டூடெண்ட்ஸ்' படத்திலும், ராகவா லாரன்சுடன் 'பென்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com