அந்த காட்டுக்குள் போனால் திரும்ப முடியாது - நடுங்க வைக்கும் காகக் கோவில்... சஸ்பென்ஸ் திரில்லரை எங்கே பார்க்கலாம்?

மார்ச் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்த காட்டுக்குள் போனால் திரும்ப முடியாது - நடுங்க வைக்கும் காகக் கோவில்... சஸ்பென்ஸ் திரில்லரை எங்கே பார்க்கலாம்?
Published on

ஓடிடி தளங்களில் இந்த வாரம் பல புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல், சமீபத்தில் திரையரங்குகளில் பெரிய வெற்றியை பெற்ற ஒரு மலையாள பிளாக்பஸ்டர் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மார்ச் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

கேரளா -தமிழ்நாடு எல்லைப்பகுதியிலுள்ள அடர்ந்த காடுகளில் அமைந்துள்ள, காகம் வடிவிலான ஒரு ரகசிய கோவிலை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அந்த காட்டிற்குள் சென்றவர்கள் மீண்டும் திரும்ப மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் புதிதாக அந்த பகுதிக்கு மாற்றம் பெற்று வரும் போலீஸ் அதிகாரி ஆனந்த், சக போலீசாரான ரெஜி மற்றும் ஸ்டீபன் உடன் இரவு பணியில் ஈடுபடுகிறார். அப்போது காகம் வடிவிலான ரகசிய கோவிலை கண்டுபிடிக்கின்றனர். அங்கிருந்து தான் கதையின் உண்மையான திருப்பங்கள் தொடங்குகின்றன.

Also Read
ஓடிடியில் ’உஸ்தாத் பகத் சிங்’ ... பவன் கல்யாணின் ஆக்சன் படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?
அந்த காட்டுக்குள் போனால் திரும்ப முடியாது - நடுங்க வைக்கும் காகக் கோவில்... சஸ்பென்ஸ் திரில்லரை எங்கே பார்க்கலாம்?

அந்த கோவிலின் பின்னணி என்ன? காட்டிற்குள் நுழைந்தவர்கள் ஏன் மீண்டும் வர முடியவில்லை? என்ற கேள்விகளுக்கான பதில்கள் தான் படத்தின் முக்கிய கதை அம்சமாக உள்ளது.

இந்த மலையாள சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் பெயர் ‘சம்பவம் அத்தியாயம் 1’. இந்த படத்தை இயக்குநர் ஜீத்து சதீஷன் இயக்கியுள்ளார். இதில் அஸ்கர் அலி, வினீத் குமார், அஸிம் ஜமால், சித்தார்த் பாரத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது ஓடிடி பார்வையாளர்களிடமும் கவனம் ஈர்த்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com