செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் நாளை சன் நெக்ஸ்ட்டில் வெளியாகிறது.
செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கவுசல்யா, கவுசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன், குஷி ரவி நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி வெளியானது.

ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இயற்கையும், அமைதியும் சூழ்ந்த கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது இத்திரைப்படம்.

இந்த நிலையில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் நாளை( மே 1ஆம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com