ஓ.டி.டி.யில் வெளியாகும் “லீடர்” திரைப்படம்... எதில், எப்போது பார்க்கலாம்?

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ திரைப்படம் வரும் 29ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஓ.டி.டி.யில் வெளியாகும் “லீடர்” திரைப்படம்... எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

2022-ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. லெஜண்ட் சரவணனின் மாறுபட்ட நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என ‘லீடர்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ‘லீடர்’ திரைப்படம் வரும் 29ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com