ஓடிடியில் வெளியானது 'பன் பட்டர் ஜாம்' திரைப்படம்

பிக் பாஸ் ராஜு நடித்துள்ள ‘பன் பட்டர் ஜாம்’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஓடிடியில் வெளியானது 'பன் பட்டர் ஜாம்' திரைப்படம்
Published on

'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியனா படம் 'பன் பட்டர் ஜாம்'. இதில் பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இதில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வருகிறது. இளசுகள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற பன் பட்டர் ஜாம் படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com