இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்!.. எதை, எதில் பார்க்கலாம்? (19.01.26 - 25.01.26)

இந்த வாரம் ஓடிடியில் எந்தெந்த படங்களில் வெளியாகின்றன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
சென்னை,
திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகியுள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.
| படங்கள் | ஓடிடி தளங்கள் |
எ நைட் ஆப் தி செவன் கிங்டம்ஸ் | ஜியோ ஹாட்ஸ்டார் |
ரெட்ட தல | அமேசான் பிரைம் வீடியோ |
தேரே இஷ்க் மெய்ன் | நெட்பிளிக்ஸ் |
| சிறை | ஜீ5 |
| மார்க் | ஜியோ ஹாட்ஸ்டார் |
சீக்காடிலோ | அமேசான் பிரைம் வீடியோ |
| 45 | ஜீ5 |
ஷம்பாலா | ஆஹா |
* எ நைட் ஆப் தி செவன் கிங்டம்ஸ்
எ நைட் ஆப் தி செவன் கிங்டம்ஸ் என்பது ஈரா பார்க்கர் மற்றும் ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை தொடராகும். இது தி ஹெட்ஜ் நைட்டில் தொடங்கி டேல்ஸ் ஆப் டங்க் அண்ட் எக் தொடரின் நாவல்களின் தழுவலாகும் . இதில் பீட்டர் கிளாபியும் , டெக்ஸ்டர் சோல் அன்செல்லும் நடித்துள்ளனர். இந்த தொடர் கடந்த 19ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது.
* ரெட்ட தல
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ரெட்ட தல படம் நேற்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
* தேரே இஷ்க் மெய்ன்
தனுஷ், கீர்த்தி சனோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தேரே இஷ்க் மெய்ன். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் விமான அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் இன்று (22ந் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
* சிறை
இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் "சிறை". இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'சிறை' படத்திற்கு கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் எல்.கே.அக்ஷய் குமார், அனந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை (23ந் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
* மார்க்
விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘மார்க்’. இதில் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்த இப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இப்படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
* சீக்காடிலோ
நடிகை சோபிதா துலிபாலா முன்னணி கேரக்டரில் நடித்துள்ள சீக்காடிலோ என்ற படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது. சீக்காடிலோ என்பதற்கு தெலுங்கில் இருட்டு என்று அர்த்தம். நிஜ வாழ்க்கையில் நடந்த குற்றங்களை அலசி ஆராய்ந்து பாட்காஸ்ட் (Podcast) செய்பவராக நடித்திருக்கிறார் சோபிதா.
* 45
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 45. ஆக்சன் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
* ஷம்பாலா
யக்குநர் யுகந்தர் முனி இயக்கத்தில் தெலுங்கு ஹீரோ ஆதி சாய்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஷம்பாலா. ஒரு புதிரான, மர்மமான கிராமத்தில் நடக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி கூறும் இப்படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் அர்ச்சனா ஐயர், ஸ்வாசிகா விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.






