விரைவிலேயே ஓ.டி.டி.யில் வெளியாகும் 'தக் லைப்' திரைப்படம்

தக் லைப் படத்தை விரைவில் ஓ.டி.டி தளத்திற்கு கொண்டு வர நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விரைவிலேயே ஓ.டி.டி.யில் வெளியாகும் 'தக் லைப்' திரைப்படம்
Published on

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு உருவான படம் 'தக் லைப்'. இதில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைப் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இப்படம் இந்திய அளவில் ரூ.40 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தக் லைப் படம் ஓ.டி.டி தளத்தில் விரைவிலேயே வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பொதுவாக ஒரு படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து 8 வாரங்களுக்கு பிறகே ஓ.டி.டி யில் வெளியாகும். ஆனால் தக் லைப் திரையரங்குகளில் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்து வருவதால், இப்படத்தை விரைவில் ஓ.டி.டி தளத்திற்கு கொண்டு வர நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com