ஆலியா பட் நடித்த ‘ஆல்பா’ ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்

ஸ்பை திரில்லர் ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் ஹிட் அடித்தது.

ஆலியா பட் நடித்த ‘ஆல்பா’ ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்
Published on

ஆலியா பட் மற்றும் ஷர்வரி நடிப்பில் உருவான ஆக்‌ஷன் ஸ்பை திரில்லர் திரைப்படமான "ஆல்பா" ஆகஸ்ட் 28-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் உளவாளிகளை மையமாகக் கொண்ட ‘ஆல்பா’

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் தற்போது இயக்குனர் ஷிவ் ராவைல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல்பா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பலிம்ஸ் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இதுவரை ஆண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு பல்வேறு யுனிவர்ஸ் திரைப்படங்களை உருவாக்கி வந்த யாஷ் ராஜ் நிறுவனம், முதன்முறையாக பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘ஆல்பா’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ஷர்வரி வாக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஸ்பை திரில்லர் ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் ஹிட் அடித்தது. நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையையும் படைத்தது.

ஆகஸ்ட் 28-ல் ஓடிடி ரிலீஸ்?

இந்த நிலையில், ‘ஆல்பா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படம் ஆகஸ்ட் 28-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இந்தி பதிப்பு வெளியாகும் என்றும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட டப்பிங் பதிப்புகளின் ஓடிடி வெளியீடு குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா?

‘ஆல்பா’ படத்தின் ஓடிடி தளம் மற்றும் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், பல்வேறு தகவல்களின் அடிப்படையில் நெட்பிளிக்ஸில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com