

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகி இருப்பவர் பிரியா பாவனி சங்கர். இவர் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். பிரியா பவானி சங்கர் கூறியதாவது: அழகு, பேஷன் எல்லாமே காலத்துக்கு ஏற்ப மாறும். ஆனால் தன்னம்பிக்கை மட்டும் நிரந்தரமானது. நம்மைச் சுற்றி உள்ளவர்கள், நம்முடன் இருப்பவர்கள் 'இவ்வளவு போதும்' என்பார்கள்.. ஆனால் நமக்கு என்ன சரி, என்ன தேவை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். திருப்தி ஆவது வேறு, செட்டில் ஆவது வேறு.. ‘இதுதான் அழகு' என்ற வரையறைகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்று பேசியுள்ளார்.