தேர்தலில் யாருக்கு ஓட்டு? - இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் கருத்து

தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என்பது குறித்து இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Published on

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. தேர்தலில் யாருக்கு ஓட்டுபோடுவது என்பது குறித்து திரையுலகினர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகர் பார்த்திபன் டுவிட்டர் பக்கத்தில், ஓட்டை போடாதீர்கள். ஓட்டை போடாதீர்கள். வல்லரசாக போகும் இந்தியாவின் கூகுள் வரைபடத்தில் ஓட்டை போடாதீர்கள். தேர்தல் வந்திடுச்சி. துட்டுக்கு ஓட்டை போட்டு நம் பிள்ளைகளின் ஆரோக்கிய வாழ்வில் ஓட்டை போடாதீர்கள்.

பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு தேர்தல் தேத்துதல் (பணம்). வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம். மேலிடத்தில் ரூபாய் வாங்காத கட்சிக்கு என்று கூறியுள்ளார்.

டைரக்டர் சேரன் டுவிட்டர் பக்கத்தில், மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கொதிப்படைய செய்து வாக்கு சேகரிப்பதும் ஒரு வகையில் தவறான அணுகுமுறைதான். பேச்சிலும் கவர்ச்சியிலும் மயங்கித்தான் 50 வருடங்கள்... நிதானமாக ஒவ்வொரு தலைவரின் உரை, இருக்கும் பிரச்சினைகள், அவர்கள் எடுத்து வைக்கும் தீர்வு என அலசுங்கள். அதுவே சரியான மாற்றம் காண வழி.

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில், சுதந்திர இந்தியாவில் ஓட்டுபோட ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் 23 வயதில் தூக்கிலிடப்பட்டார் பகத் சிங் என்னும் இளைஞன். அந்த ஓட்டு இப்போது உன் கையில் இளைஞனே மறந்து விடாதே என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com