ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி சாவு

ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி சாவு
Published on

மும்பை,

விராரில் இருந்து பால்கர் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 18 வயது கல்லூரி மாணவி ஒருவர் மின்சார ரெயில் மூலம் வந்தார். பின்னர் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த ஆகஸ்ட் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மாணவி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் பால்கரில் உள்ள செயின்ட் ஜான் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com