குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

போடி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
Published on

போடி:

போடி அருகே கீழசொக்கநாதபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினருக்கும் மேல் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள போடி-தேவாரம் சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போடி தாலுகா பேலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து சாலைமறியல் செய்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com