ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதை கண்டித்து, காங்கிரஸ் போராட்டம்

ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதை கண்டித்து, காங்கிரஸ் போராட்டம் நடத்தினர்.
ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதை கண்டித்து, காங்கிரஸ் போராட்டம்
Published on

பெங்களூரு:

'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து நேற்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்படுவதை கண்டித்து பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள சிர்சி சர்க்கிள் பகுதியில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரசார் மத்திய அரசு, அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு உண்டானது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com