திற்பரப்பு வலதுகரை கால்வாயில் தொடர் நிலச்சரிவு

திற்பரப்பு வலதுகரை கால்வாயில் தொடர் நிலச்சரிவால் தூர்வாரும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
திற்பரப்பு வலதுகரை கால்வாயில் தொடர் நிலச்சரிவு
Published on

அருமனை:

திற்பரப்பு வலதுகரை கால்வாயில் தொடர் நிலச்சரிவால்

தூர்வாரும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

திற்பரப்பு வலதுகரை கால்வாய் திற்பரப்பில் இருந்து அருமனை, மஞ்சாலுமூடு, முழுக்கோடு வழியாக இடைக்கோடு பகுதிக்கு செல்கிறது. இந்த கால்வாய் முறையாக பராமரிக்காததால் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடையாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அருமனை குஞ்சாலுவிளை பகுதியில் மேடான இடத்தில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்டு கால்வாய்க்குள் மண் விழுந்த வண்ணம் உள்ளது. இதனால் தூர்வாரும் பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கால்வாய் அடைப்பட்டு தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com