

நாமக்கல்:
384 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 403 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 384 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 787 ஆக அதிகரித்து உள்ளது.
மூதாட்டி பலி
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 120 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 473 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 3,147 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு 166 பேர் பலியாகி இருந்தனர்.
இந்தநிலையில் குமாரபாளையத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனளிக்காமல் திடீரென இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 167 ஆனது.