நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா-முதியவர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 62 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், முதியவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா-முதியவர் பலி
Published on

நாமக்கல்:

62 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 47 ஆயிரத்து 884 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களை சேர்ந்த 8 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 876 குறைந்தது.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 938 ஆக அதிகரித்து உள்ளது.

முதியவர் பலி

இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 67 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 46 ஆயிரத்து 941 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 536 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 460 பேர் பலியாகி இருந்தனர். இதற்கிடையே நேற்று கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 461 ஆக அதிகரித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com