மதுரையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் சாவு

மதுரையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலியானார்.
மதுரையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் சாவு
Published on

மதுரை,

மதுரையில் நேற்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 5 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 73 ஆயிரத்து 957 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 14 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 8 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 661 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 142 ஆக குறைந்துள்ளது.
மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 75 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,154 ஆக உள்ளது. மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனாவுக்கு தினமும் ஒருவர் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடரும் உயிர் பலிகளால் மதுரை மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
====

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com