

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 94 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
94 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தறபேது மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபோல் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
76 பேர் குணமடைந்தனர்
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 89 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 76 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 920 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். இதனால் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 885 ஆக அதிகரித்துள்ளது.