வாடிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே வங்கி மேலாளரை மாற்றக்கோரி வாடிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாடிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே வங்கி மேலாளரை மாற்றக்கோரி வாடிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் தெரியாத மேலாளர் நியமிக்கப்பட்டார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி உள்ளது.

இந்த வங்கியில் அந்த பகுதியை சேர்ந்த கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல், வடபாதி, தென்பாதி, மேலமருதூர், தலைக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.இந்த நிலையில் அந்த வங்கிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக மேலாளர் நியமிக்கப்பட்டார். அவருக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே பேசக்கூடியவர்.

ஆர்ப்பாட்டம்

கிராமங்களில் இருந்து வருவோர் கேட்கும் கேள்விகளுக்கு மேலாளர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பதில் சொல்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் வங்கி மேலாளரை உடனடியாக மாற்றி தமிழ் பேசதெரிந்த புதிய மேலாளரை நியமிக்க வேண்டும் என ஆதிரங்கம் ஊராட்சிமன்ற தலைவர் வீரசேகரன் தலைமையில், சேகல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்வரி ரெங்கசாமி, மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் ஜியாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராவுத்தரப்பா, அ.தி.மு.க. பகுதி செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கியின் வாடிக்கையாளர் ஹபிபுல்லா, ம.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஹ்மத்துல்லா, வர்த்தகர் சங்க நிர்வாகி குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து வங்கி அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடனடியாக ஒரு மணி நேரத்தில் மேலாளரை மாற்றம் செய்து தமிழ் பேசும் தற்காலிக மேலாளர் நியமிக்கப்பட்டார். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்ததோடு வங்கி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com