வாகனம் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி

கமுதி அருகே வாகனம் மோதி ஓட்டல் உரிமையாளர் பலியானார்.
வாகனம் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி
Published on

கமுதி,

கமுதி அருகே எம். ரெட்டியாபட்டி அடுத்துள்ள எம். லட்சுமி புரத்தை சேர்ந்த சுப்புராமன் மகன் மணிகண்டன் (வயது49). இவர் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கானா விலக்கு பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இரவு கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அய்யனார் கோவில் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com