

விருதுநகர்,
விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவி கொரோனாவால் பலியானார்.
பஞ்சாயத்து தலைவி
விருதுநகர் யூனியன் பாவாலி பஞ்சாயத்து தலைவியாக இருந்தவர், ராதாதேவி (வயது 35). இவருடைய கணவர் சந்துரு.
இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர் கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவியானார்.
கொரோனாவுக்கு பலி
இந்தநிலையில் தனது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 12 தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று இவருக்கு மறு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
பஞ்சாயத்து தலைவி கொரோனாவால் உயிர் இழந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.