ஓட்ஸ் மற்றும் தயிர் பேஸ் மாஸ்க்


ஓட்ஸ் மற்றும் தயிர் பேஸ் மாஸ்க்
x
தினத்தந்தி 3 Sep 2023 1:30 AM GMT (Updated: 3 Sep 2023 1:31 AM GMT)

ஓட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து, அதில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

ட்ஸில் உள்ள சபோனின் எனும் மூலக்கூறு சருமத்தில் ஆழமாக ஊடுருவி சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. இது சருமத்தை மென்மையாகவும், நீரேற்றத்துடனும் வைக்க உதவுவதோடு மழைக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கிறது. ஓட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து, அதில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

ஓட்ஸுடன் தயிர், வாழைப்பழம், பால், தேன், எலுமிச்சம் பழச்சாறு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து பேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவது குறித்து தெரிந்துகொள்வோம்.

ஓட்ஸ் மற்றும் தயிர் பேஸ் மாஸ்க்:

பொடியாக அரைத்த ½ கப் ஓட்ஸ், ½ கப் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய், 1 தேக்கரண்டி தேன் சேர்த்து பசை போல தயாரிக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேஸ்பேக்கினை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வரலாம்.

ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ பேஸ் மாஸ்க்:

பொடியாக அரைத்த ஓட்ஸ் ½ கப், நன்றாகப் பழுத்த வாழைப்பழம் 1 இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனுடன் வெதுவெதுப்பான பால் சிறிதளவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சருமத்தில் ஏற்படும் தழும்புகளை குணப்படுத்தும். 'வைட்டமின் சி' முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களை அழிக்கும்.

ஓட்ஸ் மற்றும் தேன் பேஸ் மாஸ்க்:

2 கப் ஓட்ஸுடன், 1 கப் பால் மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து பசை போல தயாரிக்கவும். அதை முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.

ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை பேஸ் மாஸ்க்:

2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அது ஆறிய பிறகு 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து நன்றாகக் கலக்கவும். இந்த பேஸ்பேக்கை முகம், கை மற்றும் கழுத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

ஓட்ஸ் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ் மாஸ்க்:

1 டீஸ்பூன் பொடியாக அரைத்த ஓட்ஸ், 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.


Next Story