நோட்புக் அட்டை அலங்காரம்


நோட்புக் அட்டை அலங்காரம்
x
தினத்தந்தி 6 Aug 2023 1:30 AM GMT (Updated: 6 Aug 2023 1:30 AM GMT)

நோட்புக் அட்டையை தனித்துவமான அலங்கார பரிசுப்பொருளாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

நோட்புக் அட்டை அலங்காரம்

தேவையான பொருட்கள்:

கனமான அட்டை கொண்ட நோட்புக் - 1

கார்டுபோர்டு அட்டை - 1

பசை - 1

டிஷ்யூ பேப்பர் - 6

ஆர்ட் கிளே - 1 பாக்கெட்

கெஸ்ஸோ (வெள்ளை நிற கலவை) - 1

சிறிய அலங்காரப் பொருட்கள் - தேவைக்கேற்ப

வெள்ளை, கறுப்பு, காப்பர் நிற அக்ரலிக் வண்ணங்கள் - தலா 1

பிரஷ் - 1

ஸ்பாஞ்ச் - 2 துண்டுகள்

செய்முறை:

முதலில் புத்தகத்தின் வெளிப்புற அட்டையின் மீது வெள்ளை நிற வண்ணக் கலவையை பூசி நன்றாக உலர வையுங்கள். அட்டையின் அடியில் கனமான காகிதம் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். இதனால் பசை, பெயிண்ட் போன்றவை புத்தகத்தின் உள்பக்கங்களில் படராமல் பாதுகாக்க முடியும்.

படம் 1, 2

கார்டுபோர்டு அட்டையில் கதவு படம் வரைந்து, படத்தில் உள்ளவாறு அதை துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

படம் 3

பசைக் கொண்டு அதனை புத்தகத்தின் வெளிப்புற அட்டையின் மீது ஒவ்வொன்றாக ஒட்டுங்கள்.

படம் 4, 5

கார்டுபோர்டு அட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி கதவைச் சுற்றிலும் ஒட்டி உலர விடுங்கள்.

படம் 6 & 7

டிஷ்யூ பேப்பரை துண்டுகளாக கிழித்து, அட்டையின் இரண்டு பக்கங்களிலும், பக்கவாட்டிலும் ஒட்டுங்கள். இது ஒரு அழகான மேற்பரப்பை உருவாக்கும். இதனை 1 மணி நேரம் உலர விடுங்கள்.

படம் 8

ஆர்ட் கிளே என்ற களிமண்ணில் சிறு சிறு உருண்டைகள் தயார் செய்து அதனை படத்தில் காட்டியவாறு ஒட்டுங்கள். 'கெஸ்ஸோ' என்பது அடர்த்தியான பெயிண்ட் போல இருக்கும். அதனை அட்டையில் பிரஷ் கொண்டு பூசுங்கள். படத்தில் காட்டியபடி சிறு குச்சி அல்லது கம்பி மூலம் இடுக்குகளில் இழுத்தால் கோடுகள் வெளியே தெரியும்.

படம் 9

அட்டையின் இருபுறமும் உலர்ந்த பிறகு, அதன் மீது கறுப்பு நிற வண்ணத்தை பூசுங்கள்.

படம் 10

ஒரு துண்டு ஸ்பாஞ்ச் கொண்டு, சிறிதளவு வெள்ளை நிறத்தை படத்தில் காட்டியுள்ளவாறு அட்டையின் மீது ஒற்றி எடுங்கள். பின்பு அதனை சிறிது நேரம் உலர வையுங்கள்.

படம் 11

பின்பு காப்பர் நிற வண்ணக் கலவையை கதவின் மீது பூசி சிறிது நேரம் உலர விடுங்கள்.

படம் 12

ஸ்பாஞ்சில் காப்பர் நிறத்தை சிறிது எடுத்து கதவின் மீது ஆங்காங்கே ஒற்றி எடுங்கள். கிளே உருண்டைகள் மீதும் அவ்வாறே செய்யுங்கள்.

படம் 13

படத்தில் காட்டியிருப்பதுபோல, உங்களிடம் இருக்கும் சிறு சிறு பொருட்களை கலைநயத்துடன் அட்டை மீது ஒட்டி நன்றாக உலர விடுங்கள்.

படம் 14

இப்போது அழகான தனித்துவமான புத்தக அட்டை பரிசு தயார்.


Next Story