மண்டைக்காடு கோவில் ஆவணித் திருவிழா... 1008 திருவிளக்கு பூஜை

விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை
Published on

கன்னியாகுமரி,

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா 3 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஆவணித் திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலை கணபதி ஹோமம், உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பஜனை, மதியம் உச்சபூஜை, மாலை சாயரட்சை தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முதல் நாள் மாலை ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை, இரண்டாம் நாள் மதியம் திரளான பெண்கள் கலந்து கொண்ட பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

1008 திருவிளக்கு பூஜை

நிறைவு நாளான நேற்று மாலை 5.45 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். மாலை 6.15 மணிக்கு தங்கரதத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு கோயில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்ப்டடன. 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.

மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com