

சென்னை:
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் புகழ்பெற்ற ஒரே புனித யூதா ததேயு திருத்தலமான, சென்னை வாணுவம்பேட்டையில் அமைந்திருக்கும் திருத்தூதர் புனித யூதா ததேயு திருத்தலத்தின் 49-வது ஆண்டு அருள்விழா மற்றும் பங்கு குடும்பப் பெருவிழா நாளை அக்டோபர் 22, 2026 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்குகிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்று வழக்கப்படி, இயேசு கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக அன்னை மரியா மற்றும் புனித அந்தோணியாரைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் அதிகளவில் வழிபடப்படும் சக்தி வாய்ந்த புனிதராகப் புனித யூதா ததேயு விளங்கிகிறார்.
மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட, சாத்தியமற்ற நிலைகளையும் சாத்தியமாக்கும் வல்லமை படைத்த அருளாளராகப் புனித யூதா ததேயு போற்றப்படுகிறார். இவர் ஏசுவின் 12 சீடர்களில் ஒருவர் மற்றும் ஏசுவின் நெருங்கிய உறவினர் என்பதால் அவரின் முகச்சாயல் கொண்டவர், இவரின் திருவுருவதில் ஏசுவின் படத்தை நெஞ்சில் கொண்டவராய் தலை உச்சியில் தீப ஒளியில் காட்சி தருகிறார்.
சென்னை நங்கநல்லூர் அருகில் அமைந்துள்ள வாணுவம்பேட்டை திருத்தலம், செங்கல்பட்டு மறைமாவட்டத்தில் புனித யூதா ததேயுவுக்காக அமைக்கப்பட்ட ஒரே ஒரு மிக முக்கியமான ஆன்மீகத் திருத்தலமாகும். இங்கு தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டோர், மன அமைதியற்றோர், தீர்க்க முடியாத பிரச்சனைகள் மற்றும் கடுமையான வாழ்வியல் வழக்குகளில் சிக்குண்டவர்கள், வெளிநாடு செல்ல வீசா வேண்டி காத்திருப்போர் மற்றும் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் நம்பிக்கையோடு இவர்வழியாக ஜெபம் செய்து எண்ணற்ற புதுமைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுச் செல்கின்றனர்.
அக்டோபர் 22, 2026 (வியாழக்கிழமை) திருக்கொடியேற்ற திருவிழா
மையச் சிந்தனை: "யூதாவின் கொடி நிழல் நமக்கு ஈந்திடும் இறையருள்"
மாலை 6.00 மணி திருஜெபமாலை, புனிதரின் சிறப்பு நவநாள் ஜெபம்.
தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆடம்பர கூட்டுத் திருப்பலி.
தலைமை: பேரருட்தந்தை A. அருள்ராஜ் (மேனாள் ஆயரின் பொது பதில் குரு மற்றும் ஆன்ம இயக்குநர், திருஇருதய குருத்துவக் கல்லூரி, பூவிருந்தவல்லி).
உடன் இணைவோர்: அருட்பணியாளர்கள் இம்மானுவேல் ராஜ் (கொளப்பாக்கம்), மைக்கேல் அலெக்ஸாண்டர் (அச்சிறுப்பாக்கம்), எட்வின் லாரன்ஸ் (புனித தோமையார் மலை), அருளுரைஞர் அருள்மணி (கீழச்சேரி), போஸ்கோ (அம்பத்தூர்).
அக்டோபர் 23, 2026 (வெள்ளிக்கிழமை) நற்கருணைப் பெருவிழா
மையச் சிந்தனை: "அப்ப வடிவான இறைவன் நம் அனைவருக்கும் நிறைவாழ்வு அளிக்கும் தலைவன்"
மாலை 6.00 திருஜெபமாலை, நவநாள் ஜெபம். 6.30மணி: ஆடம்பர கூட்டுத் திருப்பலி, சிறப்பு நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர்.
தலைமை:பேரருட் தந்தை ஞா. பாக்கிய ரெஜிஸ் (மறைமாவட்ட ஆயரின் மேனாள் பொது பதில் குரு & பங்குத் தந்தை, குரோம்பேட்டை). உடன் இணைவோர்: சிறுவயதிலிருந்து வாணுவம்பேட்டை திருத்தலத்தின் மண்ணின் மைந்தர்களாக வளர்ந்து செங்கல்பட்டு மறைமாவட்ட குருவாக உயர்ந்த அருட்பணியாளர்கள் கிளாட்வின், ரவி ஜோசப், விக்டர் வினோத்.
அக்டோபர் 24, 2026 (சனிக்கிழமை) – திருத்தேர் பெருவிழா
மையச் சிந்தனை: "ததேயுவின் தேர் பவனி துயர் போக்கும் அருள் பவனி"
மாலை 6.00 மணி: திருஜெபமாலை மற்றும் புனிதரின் சிறப்பு நவநாள் ஜெபம். 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி, திருத்தேர் மந்திரிப்பு, வண்ணமயமான திருத்தேர் பவனி.
தலைமை: மேதகு ஆயர் டாக்டர் A. நீதிநாதன் (செங்கல்பட்டு மறைமாவட்டம்).
அக்டோபர் 25, 2026 (ஞாயிற்றுக்கிழமை) – பங்கு குடும்பப் பெருவிழா & கொடியிறக்கம்
மையச் சிந்தனை: "குடும்பங்களாய் சேர்ந்து வாழ்வோம், இறைவனோடு இணைந்து மகிழ்வோம்"
காலை 8.30 மணி (ஆடம்பரத் திருப்பலி):
தலைமை: பேரருட் தந்தை பா. எஸ்தாக்கியுஸ் (செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரின் பொது பதில் குரு).
காலை 11.00 மணி: ஆங்கிலத் திருப்பலி (Feast Holy Mass in English).
தலைமை: Rev. Dr. John Lourdusamy (Correspondent, St. Sebastian Mat. Hr. Sec. School, Pallavaram).
மாலை 6.30 மணி (ஆடம்பர நன்றித்திருப்பலி & கொடியிறக்கம்):
தலைமை: அருள்முனைவர் ஆரோக்கிய பிரான்சிஸ் ஸ்டாலின் (பங்குத் தந்தை, பிராட்வே).
நிகழ்வு: திருப்பலியின் முடிவில் திருக்கொடியிறக்கப்பட்டு இறைமக்களின் வணக்கத்திற்காக ஆலய திருப்பீடத்தில் வைக்கப்படும்.
இப்பெருவிழா ஏற்பாடுகளைத் திருத்தல அதிபர் மற்றும் பங்குத் தந்தை அருள்முனைவர் இ. அந்தோணி ராஜ், உதவி அதிபர் அருள்தந்தை அலெக்ஸ் ஸ்டாலின் குமார், அருட்சகோதரிகள், அன்பிய பொறுப்பாளர்கள், நிதிக்குழு உறுப்பினர்கள், இளையோர் இயக்கம், பக்த சபையினர் மற்றும் பங்கு இறைமக்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
விழா நாட்களில் வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளும் அருள் அடையாளங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன