திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?

ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி பவுர்ணமி வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 16-ந் தேதி (சனிக்கிழமை) காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் 15-ந் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com