

மே 26-ந் தேதி (செவ்வாய்)
* திருவாடானை, நயினார் கோவில், திருப்பத்தூர், காளையார்கோவில் தலங்களில் சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி.
* திருமோகூர் காளமேகர் ராஜாங்க சேவை.
* பழனி ஆண்டவர் காமதேனு வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
27-ந் தேதி (புதன்)
* சர்வ ஏகாதசி.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் திருக்கல்யாணம்.
* காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் ரத உற்சவம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா.
* சமநோக்கு நாள்.
28-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.
* காஞ்சிபுரம் வரதராஜர் விழா தொடக்கம்.
* மதுரை கூடலழகர் யானை வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
29-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* பழனி ஆண்டவர் திருக்கல்யாணம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜர் வாமன அலங்காரம்.
* சமநோக்கு நாள்.
30-ந் தேதி (சனி)
* வைகாசி விசாகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்.
* நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி ரத உற்சவம்.
* அரியக்குடி சீனிவாசர் வெண்ணெய்த்தாழி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
31-ந் தேதி (ஞாயிறு)
* பவுர்ணமி.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்து பல்லக்கில் பவனி.
* காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் திருக்கல்யாணம்.
* உத்தமர்கோவில் சிவபெருமான் புஷ்பப் பல்லக்கில் உலா.
* சமநோக்கு நாள்.
ஜூன் 1-ந் தேதி (திங்கள்)
* பழனி ஆண்டவர் தங்கக் குதிரை வாகனத்தில் பவனி.
* காஞ்சிபுரம் வரதராஜர் காலை நாச்சியார் திருக்கோலம்.
* காட்டுபருவூர் ஆதிகேசவர் தெப்ப உற்சவம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜர் சப்தாவர்ணம்.
* சமநோக்கு நாள்.