இந்த வார விசேஷங்கள்: 30-6-2026 முதல் 6-7-2026 வரை

திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் ஜூலை 4-ம் தேதி அலங்கார திருமஞ்சனம்.
இந்த வாரத்தின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்:  30-6-2026 முதல் 6-7-2026 வரை
ஸ்ரீரங்கம் நம்பெருமாள், தாயார்
Published on

இந்த வார விசேஷங்கள்

ஜூன் 30-ந் தேதி (செவ்வாய்)

* திருத்தங்கல் நின்ற நாராயணர் யானை வாகனத்தில் பவனி.

* மதுராந்தகம் கோதண்டராமர் புறப்பாடு.

* திருவல்லிக்கேணி அழகியசிங்கர் பவனி.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* கீழ்நோக்கு நாள்.

ஜூலை 1-ந் தேதி (புதன்)

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் ரத உற்சவம்.

* திருத்தங்கல் சுவாமி, அம்பாள் கண்ணாடி சப்பரத்தில் சூர்ணாபிஷேகம்.

* மேல்நோக்கு நாள்.

2-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* சிரவண விரதம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு புஷ்பாங்கி சேவை.

* மேல்நோக்கு நாள்.

3-ந் தேதி (வெள்ளி)

* சங்கடஹர சதுர்த்தி.

* காஞ்சிபுரம் வரதராஜர் ஜேஷ்டாபிஷேகம்.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் தலங்களில் புறப்பாடு.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லி தாயார் பவனி.

* மேல்நோக்கு நாள்.

4-ந் தேதி (சனி)

* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தீர்த்த உற்சவம்.

* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

5-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* மேல்நோக்கு நாள்.

6-ந் தேதி (திங்கள்)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* கீழ்நோக்கு நாள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com