

5-ந் தேதி (செவ்வாய்)
* சங்கடகர சதுர்த்தி.
* சென்னை, சென்னகேசவப் பெருமாள், நாச்சியார் திருக்கோலம்.
* திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிப் பெருமாள் மோகனா அவதாரம்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் கண்ணாடி பல்லக்கில் பவனி.
* வீரபாண்டி கவுமாரி அம்மன் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
6-ந் தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிப் பெருமாள் புண்ணியகோடி விமானத்திலும், யானை வாகனத்திலும் திருவீதி உலா.
* திருவரங்கம் நம்பெருமாள் விழா தொடக்கம்.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
7-ந் தேதி (வியாழன்)
* சென்னை, சென்னகேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிப் பெருமாள் தலங்களில் ரத உற்சவம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.
* சுவாமிமலை, முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
8-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* திரவுபதி அம்மன் தீக்குளி உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
9-ந் தேதி (சனி)
* சிரவண விரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடராஜர் அபிஷேகம்.
* திருவரங்கம் நம்பெருமாள் கருட வாகனத் தில் பவனி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக் கினியானில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சப்தாவர்ணம்.
* திருவரங்கம் நம்பெருமாள் திருவீதி உலா.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
11-ந் தேதி (திங்கள்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்.
* சென்னை, சென்னகேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிப் பெருமாள் தலங்களில் விடையாற்று உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.