

அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமரத்தம்மன் என்ற சுந்தரவள்ளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொடடி மூன்று நாள்கள யாகசாலை பூஜை நடைபெற்றது. மங்கள இசை முழங்க பல்வேறு சிறப்பு ஹோமங்கள் மஹா பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. முன்னதாக பூர்ணகலா புஷ்கலா சமேத மேல அய்யனார் சுவாமிக்கு புனித கும்ப நீர் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வானத்தில் கருடன் வட்டமிட, கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லணை கிராம பொதுமக்கள், கிராம மரியாதைக்காரர்கள் செய்திருந்தனர்.