கோத்தகிரி அம்மன் கோவில்களில் அமாவாசை பூஜை

சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் கடைவீதி மாரியம்மன்
சிறப்பு அலங்காரத்தில் கடைவீதி மாரியம்மன்
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி கடைவீதியில் பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் பங்குனி மாத அமாவாசை நாளான இன்று காலை கடைவீதி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் மற்றும் டானிங்டன் கருமாரியம்மன் மற்றும் வராஹி அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com