ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்!

இந்தநாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிட் டும் என்பது ஐதீகமாக உள்ளது.
அன்னாபிஷேகம்
Published on: 

சென்னை,

சிவ வழிப்பாட்டில் மகா சிவராத்திரியை போன்று ஐப்பசி மாதம் பவுர்ணமியில் வரும் அன்னாபிஷேகம் மகத்துவம் வாய்ந்தது.

இந்நாளில் அன்னம் (சோறு) அலங்காரத்தில் சிவன் காட்சியளிப்பார். மற்ற நாட்களில் காணும் அபிஷேகத்தை காட்டிலும், அன்னாபிஷேகத்தில் சிவனை காண்பது கர்மவினையை தீர்க்கும்.

அன்னாபிஷேகம்

இந்தநாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிட் டும் என்பது ஐதீகமாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகத்தையொட்டி சென்னையில் உள்ள சிவன் கோவில்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப் பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடக்க இருக்கிறது. பவுர்ணமி திதி நாளை (திங்கட்கிழமை) காலை 10.16 மணி வரை இருப்பதால் ஒரு சில சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம் நடக்க உள்ளது. அன்னாபிஷேகத்தையொட்டி சிவாலயங்கள் களை கட்டியுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com