திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... அக்டோபர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் 18-ந்தேதி வெளியீடு

சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்காக தேவஸ்தானம் மாத வாரியாக கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது.
திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... அக்டோபர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் 18-ந்தேதி வெளியீடு
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு தரிசன சேவைகள் நடக்கின்றன. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்காக தேவஸ்தானம் மாத வாரியாக கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அதன்படி தரிசனம் செய்ய செல்பவர்கள் மேற்கண்ட ஒதுக்கீட்டு நேரங்களில் ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி பெறலாம்.

அக்டோபர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாதபத்மாராதனை உள்ளிட்ட அர்ஜித சேவை டிக்கெட்டுகள் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான மின்னணு குலுக்கல் பதிவு வருகிற 20-ந்தேதி காலை 10 மணி வரை செய்யலாம். தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்தினால் அவர்களுக்கான டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படும்.

பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வா கம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com